Advertisment

தற்கொலை செய்துகொண்ட மாணவி! செல்போனால் சிக்கிய காதலன்! 

Girl passed away Boyfriend trapped by cell phone!

Advertisment

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி கடந்த 30ஆம் தேதி அதிகாலை அவரை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டுவதாக கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் தொலைபேசியை ஆய்வு செய்து விசாரணை செய்தபோது தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தூரத்து உறவுக்காரரான லோகநாதன் (21) என்பவர் மாணவி படிக்கும் அதே கல்லூரியில் முதுகலைப் கணிதம் படித்து வருகிறார். இவரும் மாணவியும் கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மாணவிக்கு வெளிநாட்டில் இருக்கும் வேறு ஒருவரை திருமணம் செய்ய வீட்டில் சம்மதித்துள்ளனர். இதனையடுத்து மாணவி அவரிடம் பேசிக் கொண்டிருந்தால் அதற்கு லோகநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மாணவிக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இவர் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை வெளிநாட்டில் இருப்பவருக்கு அனுப்பி விடுவேன் என கூறியுள்ளார். இதனால் பயந்து மனவேதனை அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து லோகநாதனை தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

police Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe