
சித்தோடு அருகே வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு, 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனது குடும்பத்தினருடன், ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது இளைய மகள் கவிதா (14)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த அசோக் என்பவரிடம் பழகி கர்ப்பமடைந்துள்ளார். இதனால், கடந்த ஜன 2ம் தேதி, போக்சோ வழக்கில் அசோக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, காளிங்கராயன் பாளையம் உள்ளிக்காட்டிலுள்ள தனது சகோதரி ஸ்ரீமதி வீட்டில், மோகனா தங்கி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், செல்போனில் வாட்ஸ் அப் மூலம், 'எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. உங்க எல்லோரையும் விட்டு போறேன்'என ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு, தூக்கிட்டு மோகனா தற்கொலை செய்து கொண்டார். இதனால், பதறிய உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது, மோகனா சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து, மாரியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.