Advertisment

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு; சோகத்தில் வேலூர் மக்கள்

Girl lose their live due to electric shock; Area people in tragedy

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 14 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது பரதராமி என்னும் பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோபி. அவருடைய மகள் சஞ்சனா(14 வயது) அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் ஹீட்டரை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி சஞ்சனா உயிரிழந்துள்ளார். வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment
electicity kutiyatham
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe