Skip to main content

பதினான்கு வயதில் குழந்தை பெற்ற சிறுமி! - கரோனா தனிமையில் சீரழித்தவன் கைது

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

The girl who gave birth to a child at the age of fourteen!

 

இந்தக் கொடுமையை வழக்காக எப்படி பதிவு செய்வது என்று எழுதும்போதே கலங்கிவிட்டதாம் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையம்.

 

ஆம். அத்தனை வில்லங்கமாக இருக்கிறது, கரோனா காலத்து தனிமையில், 9ஆம் வகுப்பு மாணவியான செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கர்ப்பம் தரித்து, ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ள விவகாரம். 

 

செல்வியின் அம்மா தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர். செல்வியின் அப்பா இறந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. அவளது அம்மாவுடைய தங்கையின் கணவர் ராமருக்கு 29 வயதுதான் ஆகிறது. கரோனா பரவல் காரணமாக, பள்ளியின் தொடர் விடுமுறையில் வீட்டிலேயே இருந்திருக்கிறாள் செல்வி. அவளுடைய அம்மா வேலைக்குச் சென்றபிறகு, சித்தப்பா ராமர் அடிக்கடி வீட்டுக்கு வந்திருக்கிறான். ‘இதெல்லாம் தப்பே இல்லை’ என்று சிறுமியான செல்வியிடம் அத்துமீறியிருக்கிறான். அவள் சண்டையிட்டு மறுத்தபோது, ‘கணவன் இல்லாமல் தனியாக வாழும் உன் அம்மாவைக் கேவலப்படுத்துவேன். உன் சித்தியுடனும் வாழமாட்டேன்’ என்று மிரட்டி சீரழித்திருக்கிறான். முறை தவறிய இத்தகாத உறவை மீண்டும் மீண்டும் தொடர்ந்தபோது ‘உன்னையும் உன் அம்மாவையும் கொன்றுவிடுவேன்’ என்று கட்டாயப்படுத்தியிருக்கிறான்.

 

ஐந்தாவது மாதத்தில் செல்வி கர்ப்பமான நிலையில், அவளுடைய அம்மாவும் சித்தப்பா ராமரும், ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதுகூட, சித்தியின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்ற பயத்தில், சித்தப்பா ராமர்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என்பதை அம்மாவிடம்கூட செல்வி சொல்லவில்லை.

 

இரண்டு நாட்களுக்கு முன் (25ஆம் தேதி) இடுப்பு வலித்ததும், திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக செல்வியைச் சேர்த்துள்ளனர். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 14 வயது சிறுமியான செல்வி, அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த தகவல், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கிடைத்துள்ளது. மகளிர் ஏட்டு ஒருவர் விசாரித்தபோது, தான் மிரட்டப்பட்டு சித்தப்பா ராமரால் கர்ப்பமானதைச் சொல்லியிருக்கிறாள். போக்சோ சட்டத்தில் கைதாகியிருக்கிறான், மகள் உறவுள்ள சிறுமியிடம் மிருகமாக நடந்துகொண்ட ராமர்.

 

எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், செல்வியும் அவளது குழந்தையும், இச்சமூகத்தை எதிர்கொண்டு, எப்படி வாழப்போகின்றனரோ?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

‘பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு நிலத்தை விற்கமாட்டோம்!’  - தம்பதியர் மீது வழக்கு 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 case was filed against a couple who sold land due to caste differences

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் தமிழ்ச்செல்வன். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் இவர், நில புரோக்கர்கள்  மூலம், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மனைவி சொர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு கிரயம் பேசி முடிப்பதற்காக, ரூ.21000 முன்பணம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, கிரயப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துப் புதிய ஆவணங்களையும் தயார் செய்து, நில புரோக்கர்களுடன் வீரமணி தம்பதியர்  வீட்டுக்குச் சென்று, பத்திரப் பதிவு செய்துகொள்கிறோம் என்று கூறியபோது, “நீங்க என்ன ஜாதி?” என்று தமிழ்ச்செல்வனைப் பார்த்துக் கேட்டுள்ளனர். தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் “நாங்க உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த உங்களுக்கு இடத்தை விற்கமாட்டோம். வெளியே போ.” என்று வீரமணி தம்பதியர் விரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் சென்ற தமிழ்ச்செல்வன், தன்னை ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக புகாரளிக்க, வீரமணி மற்றும் சொர்ணலதா மீது  வழக்கு பதிவாகியுள்ளது.