Skip to main content

“சாவுக்கு கூட போகக் கூடாதுன்னு அடிக்கிறாங்க... எங்களை காப்பாத்துங்க அய்யா” - ஆட்சியரிடம் புகார் அளித்த சிறுமி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

The girl complained to the collector in Nagapattinam

 

“எங்க மாமா இடி விழுந்து இறந்தபோது கூட யாரும் தூக்க கூடாதுன்னு கட்டளை போடுறாங்க, சாவுக்கும் வாழ்வுக்கும் போக கூடாதுன்னு அடிக்கிறாங்க. இந்த அடக்குமுறையில் இருந்து நீங்கதான் எங்களை காப்பாத்தணும்” என தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய வந்த ஆட்சியரிடம் எதார்த்தமாக கூறினார் 5 ஆம் வகுப்பு மாணவி.

 

நாகை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானி டாம் வா்கிஸ் முதல் நாளே பெருங்கடம்பனூர் ஊராட்சியில் தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றார். அப்போது ஆட்சியர் ஆய்வுக்கு வருவதை அறிந்த சிறுமி ஒருவர் ஆட்சியருக்காக வாய்க்கால் மதகடியில் காத்திருந்தார். ஆட்சியர் வந்ததும் அவருக்கு சால்வை அணிவித்து தான் கொண்டு வந்த மனுவை அளித்தார்.

 

தொடர்ந்து ஆட்சியரிடம் பேசிய சிறுமி, “நற்பணி கழகம் வச்சிருக்கவங்க வாழ்வுக்கும், சாவுக்கும் எங்களை போக கூடாதுன்னு கட்டளை இடுறாங்க. எங்க மாமா இடி விழுந்து இறந்தபோது அவங்களை யாரும் தூக்க கூடாதுன்னும் கட்டளை போடுறாங்க. சாவுக்கும், வாழ்வுக்கும் போக கூடாது அப்படி மீறி போன அடிப்போம்னு சொல்லியே அடிக்கிறாங்க. அத நீங்கதான் சரி பண்ணணும் கலெக்டர் அய்யா” என்று கோரிக்கை வைத்தார். 

 

இதனைக் கேட்ட ஆட்சியர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதோடு மாணவியிடம் எந்த ஸ்கூல் படிக்கிறீங்க, எந்த வகுப்பு படிக்கிறீங்க, உங்க பேரென்ன, இப்ப ஸ்கூல் லீவா என்று ஆட்சியரும் குழந்தையாக மாறி கனிவோடு விசாரித்தார்.

 

அந்தச் சிறுமி அளித்த புகார் மனுவில், ‘நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் பகுதியில், நற்பணி கழகம் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இருந்து சோமசுந்தரம் விலகியதால் அவர் குடும்பம் உட்பட மூன்று குடும்பங்களை அந்த அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறது. மேலும், அந்த அமைப்பு, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள குடும்பங்களோடு யாரும் பேசக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளது. உறவினர் மரணத்திற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதுக்கோட்டை மாவட்டத்தின் 43வது ஆட்சியராகப் பொறுப்பேற்றார் அருணா ஐ.ஏ.எஸ்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Aruna IAS took charge as the 43rd Collector of Pudukkottai District

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் 1974 இல் உருவாக்கப்பட்டு தற்போது 51வது ஆண்டில் உள்ளது. மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக சி.ராமதாஸ் ஐ.ஏ.எஸ் 1974 ஜனவரி 14 இல் பதவி ஏற்று 3 மாதங்கள் பணியில் இருந்துள்ளார். தொடர்ந்து இதுவரை 42 மாவட்ட ஆட்சியர்கள் பணியில் இருந்துள்ளனர். தற்போது 43 வது மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் உமாமகேஸ்வரி, கவிதா ராமு, மெர்சி ரம்யா என 3 பெண் மாவட்ட ஆட்சியர்களே பணியாற்றி வந்த நிலையில் தற்போது தொடர்ந்து 4 வது பெண் மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

நெருங்கி வரும் விநாயகர் சதுர்த்தி - மனுகொடுத்த களிமண் மண்பாண்ட சங்கத்தினர்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 'Plaster of Paris Ganesha idols should be banned'- clay potters petition

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள் தற்போது துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு முடிவடைந்து சிலைகளுக்கு வண்ணம் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளாகவே இரசாயனம் கலந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்  உள்ளிட்ட பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க அரசு தடை விதித்ததோடு, விநாயகர் சிலை தயாரிப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சிலைகள் உள்ள இடங்கள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து குடோன்களை மூடிய சம்பவங்களும் நிகழ்த்திருந்தது.

இந்நிலையில் வடமாநிலத்தவர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் சிலை தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சேலத்தில் களிமண் மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குலாலர் மண்பாண்டம், களிமண் பேப்பர் கூழ் விநாயகர் சிலை பொம்மைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளுடன் மனு அளித்தனர். மேலும் சிலை தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளை விரைவாக அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.