Advertisment

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை; தாய், தந்தை, ஆண் நண்பர் ஆகியோர் கைது!

girl case, 3 people, mother, father and mother's boyfriend were arrested under POCSO Act

ஈரோட்டில் இருந்து அவல்பூந்துறை செல்லும் சாலையில் வசித்து வரும் தம்பதியினரின் 16 வயது மகள் படிப்பை முடித்து விட்டு வீட்டில் தாயிக்கு உதவியாக இருந்து வீட்டு வேலையை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை மது போதைக்கு அடிமையான நிலையில் பெற்ற மகளையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளார். அந்த சிறுமியின் தாயிக்கு நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி, சித்தம் பூண்டியைச் சேர்ந்த ரமேஷ் (44) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அடிக்கடி சிறுமி வீட்டுக்கு வரும் ரமேஷ் சிறுமியின் தாயுடன் தனிமையில் இருந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் ரமேஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியும் அவர் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஒரே நேரத்தில் தந்தையிடமும், தாயின் ஆண் நண்பரிடமும் சிக்கிக் கொண்டு சிறுமி நரக வேதனையை அனுபவித்து வந்துள்ளார். நாளுக்கு நாள் இவர்களின் பாலியல் தொல்லை அதிகரித்ததால் மனவேதனை அடைந்த சிறுமி மற்றவர்கள் உதவியுடன் 1098 என்ற பெண்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த புகாரின் அடிப்படையில் 16- வயது சிறுமியை மீட்ட அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலமாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 16- வயது சிறுமியின் தந்தை, சிறுமியின் ஆண் நண்பர் ரமேஷ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் சிறுமியின் தந்தை மற்றும் ரமேஷ் இருவரும் ஈரோடு கிளை சிறையிலும், சிறுமியின் தாய் திருப்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

police Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe