திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டூ களம்பூர் செல்லும் வழியில் பென்னாகரம் என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் சாலையோரம் டிசம்பர் 13ந்தேதி மாலை குழந்தை ஒன்றின் அழுக்குரல் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டுயிருந்தது. இதனால் அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் எங்கிருந்து சத்தம் வருகிறது எனதேடிச்சென்று பார்த்தபோது மரம் ஒன்றின் கீழ் துணியால் போர்த்தப்பட்ட குழந்தை சாலையோரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி அதை தூக்கி எடுத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20181213-WA0021.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை என்பது தொப்புள் கொடி மூலமாக தெரியவந்தது. உடனே குழந்தையை களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் குழந்தைக்கு முதலுதவி செய்தனர். இதுப்பற்றி உடனடியாக களம்பூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த போலிஸார் குழந்தையை படம் எடுத்துக்கொண்டு வழக்கு பதிவு குழந்தை யாருடையது, யார் தூக்கி வந்து இங்கு போட்டனர் என விசாரணை நடத்திவருகின்றனர்.
​
அந்த குழந்தையை பார்த்தவர்கள் அனைவரும் அதன் அழகான மழலை மெல்லிய சிரிப்பில் அனைவரும் மயங்கினர். 10 மாதம் சுமந்து பெற்ற தாய்க்கோ அந்த சிரிப்பு கசப்பை தந்துள்ளது அதனால் தான் வீசிவிட்டு சென்றுள்ளாள் ?.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)