/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/court_36.jpg)
ஓசூர் அருகே3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரைச் சேர்ந்தவர் முத்து (32). கடந்த 2014 ஆம் ஆண்டு, மே மாதம் 12 ஆம் தேதி, ஓசூரைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல்நிலைய காவல்துறையினர் முத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டாக நடந்து வந்தது.
இருதரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. முத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்துஅவருக்கு,குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகளும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)