Girl Baby found in trichy collector requested to public

திருச்சி மாவட்டம், மணிகண்டம், கல்லுக்குடி அருகே குழந்தை இயேசுதொழிற் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இன்று (30.06.2021) அதனருகே இருக்கும் முட்புதரில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சைல்டு லைன் எண்ணுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில், அந்தக் குழந்தை சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளரால் மீட்கப்பட்டது.

Advertisment

அதன்பின் குழந்தைகள் நலக்குழுவிற்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்குழந்தை, குழந்தைகள் நலக்குழு அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அதிகாரிகளின் அறிவுரைப்படி திருச்சி புனித மார்ட்டின் சிறப்பு மையத்தில்தற்போது பாதுகாக்கப்பட்டுவருகிறது.

Advertisment

அந்தப் பெண் குழந்தைக்கு டயானா என்று பெயர் சூட்டியுள்ளனர். குழந்தையைப் பற்றி தகவல் இருந்தால் 21 நாட்களுக்குள் குழந்தைகள் நலக்குழு அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்குத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் யாரும் முன்வராத பட்சத்தில் சட்டப்படி தத்து கொடுக்க தடையில்லா சான்று வழங்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தொிவித்துள்ளார்.