Advertisment

'பொண்ணு ஆப்பிரிக்கா; மாப்பிள்ளை பிரான்ஸ்'-தமிழ்நாட்டில் திருமணம்

'The girl is from Africa; the groom is from France' - a wedding in Tamil Nadu

சிவகங்கை அருகே ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண்ணும் பிரான்சை சேர்ந்த ஆணுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் செய்துசெய்து கொண்டனர்.

Advertisment

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் கிராமத்தில் 70 வயதான யூனிஸ் ஆர் நேஸ்லே என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கும் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜூலியன் சரேலேனா லே என்ற 60 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் முன்னதாக பிரான்சில் வசித்து வந்த நிலையில் தமிழக நண்பர் ஒருவரின் மூலம் தமிழ் கலாச்சாரம் பற்றிக்கேட்டு அறிந்து கொண்ட இவர்கள் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பப்பட்டுள்ளனர்.

Advertisment

இதற்காகவே சுற்றுலா விசாவில்இந்தியாவந்த இருவரும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றில்தமிழ் முறைப்படி மாலை மாற்றி தாலி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

marriage sivakangai france africans
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe