செஞ்சி அருகே உள்ள நெல்லி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் சரவணன் (26). இவர் செஞ்சி காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தார். பள்ளி மாணவ மாணவிகளுக்கான +2 தேர்வு நடந்ததால் அந்த தேர்வுபாதுகாப்பு பணிக்கு பள்ளிக்கு சென்று வேலை பார்த்துவிட்டு, மாலை காவல் நிலையம் வந்தவர் இரவு 8 மணி வரை காவல் நிலையத்தில் இருந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11111_146.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அதன்பிறகு தன் சொந்த ஊர் நெல்லி மலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற சரவணன் தன்வீட்டில் குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணி வாக்கில் பக்கத்திலுள்ள அத்தியூர் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்படி சென்றவர் நீண்ட நேரமாகி வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று தேடிப்பார்த்தனர்.
அப்போது ஒரு மரத்தில் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கியுள்ளார். அதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். அவரது தற்கொலை செய்தி மாவட்டம் முழுவதும் காவல்துறையில் ஒரு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாதவர் சரவணன். அவர் மரணச் செய்தி கேட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார் அந்த நள்ளிரவில் அங்கு விரைந்து சென்று சரவணன் உடலைப் பார்த்ததோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அனைவரிடமும் நட்பாக பழகும் குணம் உள்ளவர் சரவணன். அப்படிப்பட்டவருக்கு எப்படி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது என சக நண்பர்கள் ஆதங்கத்துடன் பேசிக் கொண்டார்கள். இதுபற்றி செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)