சிறப்பாக பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பரிசு மழை!

Gift rain for the best working private company employees!

மென்பொருள் நிறுவனம் ஒன்று சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் மற்றும் ஐபோன்கள் உள்ளிட்டபரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தியது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டம், காளவாசலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, அந்நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு பல்வேறு விலை உயர்ந்தபரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஒருவருக்கு ரூபாய் 1.50 லட்சம் மதிப்புடைய பல்சர் பைக்கும், மூன்று ஊழியர்களுக்கு ஆப்பிள் ஐபோன்களும் வழங்கப்பட்டது.

மேலும், மூன்று ஊழியர்களும் தலா ரூபாய் 50,000 ரொக்கத்தைப் பரிசாக வழங்கியது அந்நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சியோடு பணியாற்ற உதவிடும் வகையில், பரிசு வழங்கப்படுவதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

employees gifts
இதையும் படியுங்கள்
Subscribe