The gift given by the Tamil Nadu BJP in accordance with the advice of Prime Minister Modi

நேற்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா சென்னையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கொண்டாடினர். அதில் பாஜக வழகறிஞர் அணிசார்பாக சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் பகுதியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழிவின்போது ‘சிப்பிப்பாறை’ நாட்டு நாய் தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டது.

Advertisment

கடந்த 30-ம்தேதி ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘தமிழகத்தின் ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற நாட்டு நாய் இனங்களை புறக்கணிக்காமல், அவற்றை எடுத்து கனிவுடன் சிறப்பாக வளர்க்க வேண்டும்’’ என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். இதனை ஏற்று நடக்கும் விதமாக தமிழக பாஜக வழக்கறிஞர் அணி சார்பாக ஒரு சிப்பிப்பாறை நாட்டு நாய், தமிழக காவல் துறையின் மோப்ப நாய் பிரிவுக்கு பரிசாக வழங்கப்பட்டது. எல்.முருகன் சிப்பிப்பாறை நாயை காவல் துறைக்கு பரிசாக வழங்கினார்.

Advertisment