The gift of being vaccinated! Panchayat leader announcement

Advertisment

கடலூர் மாவட்டம்,மங்களூர்ஊராட்சி ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் உள்ளன. இதில்தொழுதூர்அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக உள்ளவர் மல்லிகை வேல்முருகன். இவர், நேற்று தங்களது கிராமத்தில் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளிப்படுத்தினார். அந்த அறிவிப்பில், ‘ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையான மக்கள்கரோனாதடுப்பூசி ஏற்கனவே போட்டுக் கொண்ட நிலையில், மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் அவர்களே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் அவர்களுக்கு தலா 50 ரூபாய் சன்மானம் வழங்கப்படும். அதிலும் முதலில் வரும் 50 பேருக்கு 50 ரூபாய் பரிசு’ என ஊராட்சிமன்றத் தலைவர் அறிவித்தார். அந்த ஊராட்சி பொதுமக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளது.