
கன்னியாகுமரியில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து நீர் அருவி போல் பீறிட்டுக் கொட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாமியார்மடம் என்ற பகுதிக்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர். அதேபோல் நீர் பீறிட்டுக்கொண்டு அருவி போல் கொட்டிய இடத்திற்கு மேலேயே உயர் மின்னழுத்த கம்பிகள் சென்று கொண்டிருந்தது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.