Advertisment

வீட்டுத் தோட்டத்திற்குள் புகுந்த ராட்சத முதலை!

Giant crocodile enters home garden

சிதம்பரம் அருகே அம்மாபேட்டை கிராமத்தில் வசிக்கும் சம்பந்த மூர்த்தி என்பவரின்வீட்டுத்தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலை ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அவரது வீட்டினர் கூச்சல் போட, அக்கம்பக்கதினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

Advertisment

தகவலின் பெயரில் சிதம்பரம் வன ரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் வனப்பிரிவு அலுவலர் பன்னீர்செல்வம் வனக்காப்பாளர் அன்புமணி வன ஊழியர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பிறகு வனத்துறை ஊழியர்கள் லாவகமாக 13 அடி நீள முதலையை பொதுமக்களின் உதவியுடன் பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்கராமாரி ஏரியில் விட்டனர்.

Advertisment

Giant crocodile enters home garden

இந்த முதலை 13 அடி நீளமும் 550 கிலோ எடையும் கொண்டது என்றும் இதுவரை பிடித்த முதலையை விட இதுதான் அதிக நீளம் உடையது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chidambaram forest house
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe