
கானா பாடகியான இசைவாணி தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் என்ற ஷோவில்கலந்துகொண்டு பிரபலமானவர். திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'மார்கழியில் மக்கள் இசை' நிகழ்ச்சியிலும் கானா பாடல்களை பாடியுள்ளார். இன்று இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இசைவாணி கருத்துவேறுபாடு காரணமாக சட்டபடி விவாகரத்து பெற்றார். இந்நிலையில் முன்னாள் கணவன் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில்,'முன்னாள் கணவர் சதீஷ் தன் பெயரை சொல்லி ஆர்கெஸ்டரா நடத்துகிறார். தன்னை அவரது மனைவி என்று சமூக வலைத்தளங்களில் கூறிக்கொண்டு திருமணமானபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை பயன்படுத்தி என் பெயரை சொல்லி மோசடியில் ஈடுபடுகிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் என்னை பாட வைப்பதாக பணம் பெற்று ஏமாற்றுகிறார். இதனால் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் தன்னிடம் வந்து கேட்கும்போதுதான் இதுபோன்ற மோசடி எல்லாம் தெரிய வருகிறது. இதுதொடர்பாக கேட்டால் ஆசிட் வீசி விடுவதாக கொலைமிரட்டல் விடுகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)