கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கூட்டத்தில் மத, ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் ஜார்ஜ் பொன்னையா என்பவர் சட்டவிரோதமாக பேசினார். அவரை கைது செய்திட வலியுறுத்தி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக மாவட்டத் தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. முன்னதாக இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில், இந்து கடவுள்களை விமர்சித்த புகாரில் தேடப்பட்டுவந்த மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா, இன்று (24.07.2021) மதுரையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.