Skip to main content

புவியியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கு - பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
m

 

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் டி.சவுமியா, கரூர் பி.மாலதி, நமக்கல் டி.சசிகலாதேவி, சி.ஐயப்பன், ஈரோடு பி.நல்லசாமி, சேலம் சி.ஜெயகுமார் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  ‘’நாங்கள் பிஎஸ்சி (புவியியல்), பிஎட் படித்துள்ளோம். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளின்படி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய தகுதி பெற்றுள்ளோம். தமிழகத்தில் 2012-2013 மற்றும் 2015- 2016 கல்வி ஆண்டுகளில் 420 சமூக அறிவியல் (புவியியல்) பட்டதாரி ஆசிரியர் பின்னடைவு பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்தது.  இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக 2014-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் 11 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. எஞ்சிய 409 பணியிடங்களை இப்போது வரை நிரப்பப்படவில்லை.

 

இந்தநிலையில் 2017-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் நாங்கள் வெற்றிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோம். அப்போது எங்களது கல்வித் தகுதி அடிப்படையில் ஒவ்வொரு படிப்பிலும் நாங்கள் பெற்ற மதிப்பெண்ணுக்காக தனியாக கருணை மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. இதனால் சமூக அறிவியல் (புவியியல்) ஆசிரியர் பின்னடைவு பணி நியமனத்துக்காக காத்திருக்கிறோம்.


இதனிடையே ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப்பெற்றது மட்டுமின்றி அரசு நடத்தும் போட்டித் தேர்வில் வெற்றிப்பெறுவோர் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு 20.07.2018-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. பின்னடைவு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி 2014-ல் தொடங்கியது. இதனால் அப்போது அமலில் இருந்த பணி நியமன நடைமுறைகளை பின்பற்றியே பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

எனவே பள்ளிக்கல்வித்துறை 2014-ல் வெளியிட்ட அரசாணையை பின்பற்றாமல் பின்னடைவு சமூக அறிவியல் (புவியியல்) பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை விதித்தும், 2017-ல் சான்றிதழ் சரிபார்ப்பின் போது வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் அடிப்படையில் பின்னடைவு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் எங்களை நியமனம் செய்யவும், போட்டித் தேர்வு அரசாணையை பின்பற்றாமல் 2014-ல் அமலில் இருந்த பணி நியமன முறைகளை பின்பற்றி பின்னடைவு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, செப்டம்பர் 11-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'' பிரதமர் பிறந்தநாளில் மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை'' - நீதிமன்றம் கருத்து!   

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

 "It is not necessary to conduct a bullock cart race on the birthday" - the opinion of the court!

 

பிரதமர் மோடி பிறந்தநாளில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று நெல்லையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதிகோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது அதில் பாரபட்சம் கட்டக்கூடாது. பிறந்தநாள் விழா என்றால் இனிப்புகள் வழங்கலாம், நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

 

 

Next Story

'தவறுசெய்யத் துணைபுரிந்தால் யூடியூப்பும் குற்றவாளியே'-நீதிமன்றம் அதிரடி!

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

highcourt

 

யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது தொடர்பாக அரசிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

 

முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து வீடியோ வெளியிட்டதாக கைதுசெய்யப்பட்ட யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்ட வழக்கில் இந்த கருத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூட்யூபில் வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளச்சாராயம் தயாரிப்பது எப்படி என்பது போன்ற வீடியோக்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் தவறுசெய்ய துணை புரிந்தால் சட்டப்படியும் யூடியூப்-பும் குற்றவாளியே. யூடியூபில் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாமா?. இல்லை யூடியூப்பையே தடை செய்யலாமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.