Advertisment

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு!

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை போன்றவை புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த வரிசையில் 29 ஆவதாகபழனி கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட இருப்பதாக ஜியோக்ரஃபிக்கள் இண்டிகேசன் அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு தெரிவித்துள்ளார்.

Advertisment

Geological code to Palani Panchamirtham

தமிழ்நாட்டில் இருந்து சர்வதேச அங்கிகாரம் பெற்ற ஒரு பிரசாதம் பழனி பஞ்சாமிர்தம். வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து இயற்கை பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தனிச்சுவை கொண்டது. இதனை அதிகநாட்கள் பாதுக்காக்க எந்த ஒரு வேதிப்பொருளும் சேர்க்கப்படுவதில்லை என்பது அதன் மற்றொரு சிறப்பும்கூட. திரவநிலையில் பாகுபோல இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீர் கூட கலப்பதில்லை. இப்படி தனித்தன்மை கொண்ட பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி பழனி கோவில் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

panjamirtham pazhani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe