Geographical Indication for 6 more products in Tamil Nadu

தமிழகத்தில் ஈரோடு மஞ்சள், ஊட்டி வரிக்கி என 60க்கும் மேற்பட்ட பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில் அந்த பட்டியலில் அண்மையில்கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை இடம்பெற்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதன்படி புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, செட்டிகுளம் சின்ன வெங்காயம், பண்ருட்டி பலா மற்றும் முந்திரி ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment