General Secretary praises Mary, the cleaning staff, for wearing the shawl!

பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் ஏ.மேரி ,குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததற்காக அவரது நேர்மையைப் பாராட்டி, அவருக்குத்தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. பாராட்டு கடிதம் எழுதியிருந்தார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, இன்று (23/10/2021) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தூய்மைப் பணியாளர் ஏ.மேரியை நேரில் அழைத்த, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவருக்குச் சால்வை அணிவித்து, திருவள்ளுவர் சிலை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Advertisment

இந்த நிகழ்வின் போது, தலைமைச் செயலாளருடன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. உடனிருந்தார்.