Advertisment

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்.,31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!

hj

Advertisment

தமிழகத்தில் நாளையுடன் 8-ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையும்நிலையில்,தியேட்டர்கள் திறப்பது, பள்ளி- கல்லூரிகளை திறப்பது, தனியார் பேருந்து சேவை மற்றும் புறநகர் ரயில் சேவையை தொடங்குவது, உள்ளிட்டவை குறித்து முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தற்போது தளர்வுகளுடன் அக்டோபர் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாயாகியுள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் என்றும், புறநகர் ரயில் போக்குவரத்துதொடர்ந்து ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. அக்டோபர் 1 முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்று கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe