பா.ரஞ்சித்திடம் கேள்வி கேட்ட காயத்ரி ரகுராம்!!!

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வில் தோல்வியடைந்ததால் 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

pa ranjith gayatri raguram

இதுகுறித்து ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டார் இயக்குனர் பா. ரஞ்சித் அதில், ‘நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நீங்கள் ஒரு படம் எடுத்து அது தோல்வியடைந்தால், அதற்காக தற்கொலை செய்துகொள்வீர்களா அல்லது அடுத்து முயற்சி செய்வீர்களா அல்லது படங்களையெல்லாம் தடைசெய்யவேண்டும் என போராடுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

gayathriraguram neet Pa Ranjith twitter
இதையும் படியுங்கள்
Subscribe