ADVERTISEMENT

"தடுப்பூசிகள் இலவசமாக போடவேண்டும்" தமிழக அரசுக்கு காயத்ரி ரகுராம் கோரிக்கை 

01:31 PM Apr 21, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனாவைக் கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் போடப்படுகிறது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுவந்த தடுப்பூசிகள், மே மாதம் 1ந் தேதியிலிருந்து 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போட அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் பாஜகவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பிரிவின் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம். இது குறித்து பேசிய அவர், "கரோனா வைரஸை தடுப்பதில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது இப்போது அவசியம். பாஜக ஆளும் உ.பி.யில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகிறது. அதே போல தமிழகத்திலும் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்கிறார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துமனைகளில் ஒரு டோஸ் இன்ஜெக்சன் 250 ரூபாய்க்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT