Gayatri Raghuram is furious!

Advertisment

அம்பேத்கர் பிறந்தநாளான நேற்று சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில் பாஜகவினருக்கு விசிக தரப்பினருக்கும் இடையே மோதல் கல்வீச்சு சம்பவம் நடைபெற்று கோயம்பேடு பரபரப்பானது.

இந்நிலையில் நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பாஜக கட்சியின் பிரமுகர் காயத்ரி ரகுராம் 'வெற்றிவேல் வீரவேல்' என ஆவேசமாக அவரது ஆதரவாளர்களும் முழக்கமிட்டார். சாலையில் வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்த பொழுது அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஆவேசமாக முழக்கமிட்டுக் கொண்டிருந்த காயத்ரி ரகுராம். அவரிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்டியப்பொழுது ''திருமாவளவன் சொல்கிறார் சனாதானத்தை வேரோடு எடுத்து விடுவோம் என்று, இன்று சனாதனத்தோட வேரே இந்தியா தான்... ஞாபகம் வச்சுக்கோங்க...'' என ஆவேசமாகப் பேசினார்.