ADVERTISEMENT

“என்னை மானபங்கப்படுத்தியதற்கு நன்றி” - பாஜகவை விமர்சித்த காயத்ரி ரகுராம் 

12:45 PM Jan 14, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய உளவுத்துறையினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன்படி உளவுத்துறை மத்திய உள்துறைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில், அண்ணாமலையின் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்ணாமலைக்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம், அண்ணாமலைக்கு z பிரிவு பாதுகாப்பு வழங்கியது குறித்து விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆபாச பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றித் தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி. நான் உங்களை அப்பாவாக பார்த்தேன். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மான பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி. என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT