Advertisment

சென்னையில் போராட்டம் நடத்திய கள்ளக்குறிச்சி எம்.பி..! (படங்கள்)

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தைக் கண்டித்து, தமிழ்நாடு கைப்பந்து சங்கத் தலைவரும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கெளதமசிகாமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், ‘கடந்த 14.02.2021 அன்று செங்கல்பட்டு புனிதசூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் சட்டவிரோதமாக சப்-ஜுனியர் தமிழ்நாடு மாநில அணி தேர்வைத் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அஸோசியேஷன் (TNOA) நடத்தியுள்ளனர்.

Advertisment

இந்த நிகழ்வு நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்திற்கு எதிராகவும், தமிழக அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய விளையாட்டு மானியங்களைக்கிடைக்கவிடாமல் தடுக்கின்ற நோக்கோடு அங்கீகாரகடிதத்தினைக் கடந்த 1.5 வருடங்களாக வழங்காமல் இழுத்தடித்தும், நமது மாநில வாலிபால் சங்கத்தை அங்கீகரித்து மத்திய அரசுக்கு(ரயில்வே துறைக்கு) கடிதம் வழங்கி இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வீரர்களிடத்தில் தொடர்ந்து குழப்பம் விளைவிக்கும் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அஸோசியேஷனின் (TNOA) நடவடிக்கைகள் தொடரா வண்ணம் இருக்கவும், இத்தகைய நிகழ்வு வரும் காலங்களில் எந்த விளையாட்டு சங்கத்திற்கும் ஏற்படக்கூடாதுஎனவும்’வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

Advertisment

Association volleyball
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe