Gautama Chikamani MP Appear in court

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கவுதம சிகாமணி எம்.பி. ஆஜராகியுள்ளார்.

Advertisment

செம்மண் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் மூலம் சட்ட விரோதமாகப்பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி, திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும்கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத்தொகுதி எம்பியுமான கவுதம சிகாமணி மீதுஅமலாக்கத்துறை சார்பில், சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தடைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக கவுதம சிகாமணி எம்.பி. ஆஜராகியுள்ளார். அவரிடம் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற புகார் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.