/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/petrol-bunk.jpg)
சென்னையில் பெட்ரோல் பங்க் ஒன்றின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மழையின் போது வீசிய காற்றால் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கிய வாகன ஓட்டிகள் பலர் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும்தீயணைப்புத் துறையினர் கூரையின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த ஒரு பெண் உட்பட 6 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us