/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/john pandiyan.jpg)
நெல்லை அருகே உள்ள பாளையங்கோட்டையில் மணக்காவலன் பிள்ளை நகரில் உள்ளது தமிழக மக்கள்
முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இல்லம். முக்கிய சாலையில் அமைந்துள்ள அவரது
இல்லத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் ஜான்பாண்டியன் அவரது கட்சி பொறுப்பாளர்களுடன்
பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது வீட்டை நோக்கி பெட்டோல் குண்டை வீசினர். அந்த பெட்ரோல் குண்டு வீட்டின் முன்புறம் உள்ள மரத்தில் பட்டு தெறித்தது. அதிர்ஷ்டவசமாக அவரது வீட்டிற்குள் விழவில்லை. இதனால் பரபரப்பான ஜான் பாண்டியனின் சகாக்கள் வெளியே வந்து மர்ம நபர்களை தேடினர். அதற்குள்ளாக மறைந்துவிட்டனர்.
அவரது கட்சியின் முக்கிய பொறுப்பாளரான கண்மணி மாவீரன், ‘’நாங்களும் தலைவரும்
பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பாட்டில் சத்தம் கேட்டது. வெளியே வந்த பார்த்தபோது பைக்கில்
வந்தவர்கள் வேகமாக மறைந்தது தெரிந்தது. அவர்கள்தான் வீசியிருக்க வேண்டும்’’என்கிறார்.
இது குறித்து நெல்லை மாநகர துணை கமிஷனர் சுகுணா சிங்கிடம் பேசியபோது, ’’அந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரணை மேற்கொண்டிருக்கிறோம்’’ என்கிறார்.
தென்மாவட்ட தலைவர்களில் முக்கியமானவரான ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட
சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)