Advertisment

எரிவாயு டேங்கர் லாரி விபத்து- பள்ளிகளுக்கு விடுமுறை

Gas Tanker Truck Accident- Schools Holiday

Advertisment

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்து வருகிறது. இது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.

கோவை உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலம் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுவரை எவ்வளவு எரிவாயு வெளியாகி உள்ளது என்பது தொடர்பாக தொடர்ந்து பொறியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டேங்கரின் ஒரே பகுதியில் லீக் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிய வந்திருக்கிறது.

எரிவாயு கசிவை கட்டுப்படுத்திய பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மேலே எந்த ஒரு மின் கம்பிகளும் இல்லாமல் இருப்பதை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம் என்பதால் அந்த பகுதியில் மின் கம்பிகள் இல்லை. தொடர்ந்து லாரியிலிருந்து கசிந்து வரும் எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சிறிது அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Advertisment

அதிகாலை 3 மணி அளவில்இந்த விபத்து நடந்த நிலையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக எரிவாயு கசிவை தடுக்கும் பணியும் டேங்கர் அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்து நடந்த அந்த பகுதியைச் சுற்றியுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

kovai accident gas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe