Advertisment

சிதம்பரத்தில் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ சுபம் கேஸ் ஏஜன்சீஸ் சார்பாக எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

Advertisment

 Gas Safety Awareness Camp at Chidambaram

இந்த விழிப்புணர்வு கூட்டத்தை குமாரமங்கலம் ஊராட்சி மன்ற மு.தலைவர் மகன் சரவணன், நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தனர். சுபம் கேஸ் நிர்வாக இயக்குனர்கள் புகழேந்தி, சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் இண்டேன் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்றும், எரிவாயு கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு அதற்கான செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.

Advertisment

இந்த எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் சுபம் கேஸ் மேலாளார் ஆனந்த் உள்ளிட்ட ராகுல்காந்தி ,ராஜா, மணிமாறன், புருஷோத்தமன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

gas cylinder gas CHITHAMPARAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe