Advertisment

'தேர்தல் நேரத்தில் கேஸ் விலையை குறைத்திருப்பது மகளிரை கொச்சைப்படுத்துவதாகும்'- கனிமொழி பேச்சு

dmk

'கேஸ் விலையில் 100 ரூபாய்மட்டும் குறைந்திருப்பது மகளிரை கொச்சைப்படுத்துவது' என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியுள்ளார்.

Advertisment

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக மகளிர்ணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எம்.பி.கனிமொழி கலந்து கொண்டார். ஊரகத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் கீதா ஜீவன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், முன்னாள் அமைச்சர் தமிழரசி உட்பட கட்சி பொறுப்பாளர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''பெண்களுக்காக தேவையை நிறைவு செய்து திட்டம் இயற்றியவர் கலைஞர். பெண்களுக்கான சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் தலை நிமிர்ந்துள்ளனர். பெண்களின் துன்பங்களை அறிந்து கலைஞருக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் அந்த பணியை நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு மகளிர் உரிமைதொகை என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்''என்றார்.

அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசின் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. 18 சதவீதம் ஜிஎஸ்டிவரியாக மாநில அரசிடம் பெற்று சில பைசாக்களை மட்டும் மக்கள் நலத்திட்ட உதவித்தொகையாக தருகிறது. பாஜக அரசுஊழலை பற்றியும் ஸ்டிக்கர் ஒட்டுவதைப் பற்றியும் பேசவே அருகதை அற்றவர்கள்'' என்றார்.

nn

தொடர்ந்து நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், ''இரண்டு நாட்களுக்கு முன்புதான் மகளிர் தின விழாவை முன்னிட்டு கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் இங்கு மகளிர் தின விழா மாநாடு நடத்தி காட்டி உள்ளார்கள் அமைச்சர்களான ஐ.பெரியசாமியும் சக்கரபாணியும். இவர்கள் ஒட்டுமொத்த திமுக அரசியலுக்கும் ரிங்மாஸ்டராக உள்ளனர். பிரதமர் மோடி கேஸ் விலையை உயர்த்தி அதன் மானியத்தை நிறுத்தி, தற்போது தேர்தல் மனதில் வைத்துக்கொண்டு 100 ரூபாய் மட்டும் குறைத்து இருப்பது என்பது மகளிர கொச்சைப்படுத்துவது போன்றதாகும்'' என்றார்.

kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe