Advertisment

எரிவாயு குழாய் வெடிப்பால் பரபரப்பு

Gas pipe explosion

Advertisment

மணலி புதூர் அருகே இயற்கை எரிவாயு குழாய் உடைந்து எரிவாயு கசிந்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதூர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிவாயல்சாவடி பகுதியில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட இயற்கை வாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் எரிவாயு கசிந்து வான்நோக்கி புகை மண்டலமாக சென்று வருகிறது. இது அந்த பகுதி மக்களுக்குஅச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த உடைப்பால்சென்னைக்கு எரிவாயு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

gas thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe