Advertisment

தனியார் பள்ளியில் வாயுக்கசிவு; திருவொற்றியூரில் பரபரப்பு

gas leak in private school;  There is excitement in Thiruvetriyur

Advertisment

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி ஒன்றில் வாயுக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் திடீரென கெமிக்கல் வாசகம் வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாயு நெடி எந்த பகுதியில் இருந்து வெளியானது என்பது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்புத் துறையினரும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

gas police
இதையும் படியுங்கள்
Subscribe