gas leak issue; Preliminary information from Pollution Control Board

சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 25 ஆம் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் (04/11/2024) வாயுக்கசிவு ஏற்பட்ட அதே பள்ளியில் மீண்டும் மாணவிகள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்த மீண்டும் இந்த தகவல் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

Advertisment

உடனடியாக பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அவசரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி காலவரை இறையின்றி மூடப்படுவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பள்ளி திறப்பதற்கு முன்பு அரசு அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். பள்ளியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பள்ளி திறக்கப்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி, சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை பள்ளி திறக்கப்பட மாட்டாது' என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேற்றிலிருந்து சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் எந்த வாயு கசிவுக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஆய்வு செய்து இந்த வாரத்தின் இறுதியில் இதற்கான இறுதி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இறுதியாக கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்த வாரத்தில் பள்ளியைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment