Advertisment

கேஸ் கசிந்து தீ விபத்து; 3 பேர் பலியான சோகம்!

Gas leak incident 3 people lost his life

சென்னை கோவிலம்பாக்கத்தில் காந்திநகர் 14வது தெருவில் வசித்து வந்தவர் முனுசாமி. இவரது வீட்டில் கடந்த 5ஆம் தேதி இரவு முழுவதும் கேஸ் கசிந்தது. இதனை அறியாமல் மறுநாள் காலை முனுசாமியின் மனைவி ராணி வீட்டில் இருந்த அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது கேஸ் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்தது. அதே சமயம் வீட்டிலிருந்த முனுசாமி, ராணி, அவர்களது மகள் சாந்தி மற்றும் சாந்தியின் கணவர் ரகு இந்த தம்பதியரின் மகன் ஹரிஹரன் என 5 பேரும் தீயில் சிக்கிக் கதறியுள்ளனர்.

Advertisment

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேடவாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முனுசாமி, சாந்தி, மற்றும் ஹரிஹரன் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

முன்னதாக அடுப்பைப் பற்ற வைக்கும்போது தீப்பற்றியதாக எழும்பூர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் பலத்த தீ காயம் ஏற்பட்ட ராணிக்கு கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கோவிலம்பாக்கத்தில் ஏற்பட்ட கேஸ் கசிவால் 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Chennai incident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe