கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு தி.மு.க மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்..!

Gas cylinder price erode DMK

தி.மு.க மகளிரணி சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுக்க 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.வின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.சந்திரகுமார் மாவட்ட மகளிர் அணித் தலைவர் இளமதி உட்பட நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Erode gas cylinder price
இதையும் படியுங்கள்
Subscribe