/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/INDANE3333.jpg)
சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபாய் 660-லிருந்து 710 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிசம்பர் 1- ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 610- லிருந்து ரூபாய் 660 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 15 நாட்களில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 100 அதிகரிக்கப்பட்டதால் நடுத்தர மக்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முன்பதிவு செய்யும் போது பழைய விலையாக இருந்தாலும் புதிய விலைக்கே சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)