Advertisment

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி மகளுடன் திமுக பிரமுகர் உடல் கருகி பலி!

Kodaikanal

கொடைக்கானல் கீழ்மலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து மனைவி மகளுடன் திமுக பிரமுகர் உடல் கருகி பலியானார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உள்ள மங்கலம் கொம்பை சேர்ந்தவர் கணேசன். திமுக பிரமுகரான இவர், கடந்த பஞ்சாயத்து தேர்தலில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு மனைவி மஞ்சுளாதேவியும் மகள் விஷ்ணுபிரியாவும் உள்ளனர்.

Advertisment

Kodaikanal

கொடைக்கானல் மலைப்பகுதி என்பதால் கணேசன் தனது மகளை திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி தனியார் பள்ளியில் தங்கவைத்து படிக்கவைத்து வந்தார். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் விஷ்ணுபிரியா ஊருக்கு வந்தார். இவர்களது வீடு மலைப்பகுதியில் உள்ளது. எனவே காட்டு யானைக்கு பயந்து வீட்டை தகர கொட்டையால் மேயப்பட்டு அதை சுற்றிலும் மரப்பலகையால் அடைக்கப்பட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு கணேசன் தனது குடும்பத்தாருடன் அந்த வீட்டில் அயர்ந்து தூங்கினார். சனிக்கிழமை அதிகாலையில் கணேசனின் மனைவி மஞ்சுளாதேவி வழக்கம் போல் காப்பி போடுவதற்காக கேஸ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது சிலிண்டரில் உள்ள கேஸ் லீக்காகி இருந்ததை கவனிக்காத மஞ்சுளாதேவி நெருப்பை பற்ற வைத்தார்.

Kodaikanal

அப்பொழுது கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி வீடு முழுவதும் தீ பரவியது. வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அலறித் துடித்தனர். திடீரென்று கணேசனின் வீட்டில் புகையும் அலறல் சத்தம் வருவதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றியுள்ளனர். நெருப்பை அணைத்து அதன்பின் வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது, கணேசன் அவரது மனைவி மஞ்சுளா தேவி மகள் விஷ்ணு பிரியா ஆகியோர் வீட்டுக்குள்ளேயே உடல் கருகி பலியானார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரவியதால் ஏராளமான மலை கிராம மக்கள் குவிய தொடங்கினார்கள். இந்த விஷயம் தாண்டிகுடி போலீசாருக்கு தெரிந்ததின் பேரில் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் துயரச் சம்பவம் கொடைக்கானல் கீழ் மலை, மேல்மலை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident cylinder died fire gas kodaikanal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe