Advertisment

கேஸ் சிலிண்டர் வெடிவிபத்து... உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்வு!

Gas cylinder explosion in salem

சேலத்தில் சமையல்கேஸ்சிலிண்டர்வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கைஐந்தாகஅதிகரித்துள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம்கருங்கல்பட்டியில்கோபிநாத் என்பவரின் தாயார்ராஜலக்ஷ்மிசமைப்பதற்காக எரிவாயுசிலிண்டரைபற்ற வைத்த பொழுது எதிர்பாராதவிதமாககேஸ்சிலிண்டர்வெடித்தது. ஏற்கனவேகேஸ்கசிவு இருந்ததைஅறியாமல்அடுப்பைப்பற்றவைத்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தில்அருகிலிருந்தவீடு,மாடியிலிருந்தவீடு என மொத்தம் 4 வீடுகள் தரைமட்டமானது. சம்பவஇடத்திற்குச்சென்ற தீயணைப்புத்துறையினர்இடிபாடுகளில்சிக்கியவர்களைமீட்டனர். மொத்தம் 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில்தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில்மூதாட்டிராஜலக்ஷ்மிஉட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Advertisment

தீயணைப்புத்துறையில் பணியாற்றி வரும் பத்மநாபன், அவரது மனைவி தேவி,கார்த்திக்ராம்ஆகியோரைதீவிரமாகத்தேடிவந்தநிலையில் பல மணிநேரதேடுதலுக்குப்பின் சடலமாக மூவரும்மீட்கப்பட்டனர். அதேபோல் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மற்றொரு மூதாட்டி எல்லையம்மாள் என்பவரின் உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் பணியாற்றி வந்தவர்வீட்டிலேயே நிகழ்ந்த இந்தகேஸ்சிலிண்டர்வெடி விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர் வணிக கேஸ் சிலிண்டர் என்பதால் விபத்து சேதம் அதிகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

gas cylinder fire police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe