
சேலம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருங்கல் பட்டியில் இன்று (23.11.2021) அதிகாலை கேஸ் அடுப்பை பற்றவைக்கும்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் அருகில் இருந்த நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 12 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில், விபத்து நடந்த வீட்டின் உரிமையாளரான தீயணைப்பு ஊழியர் பத்மநாபன் இடிபாடுகளிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்றுவருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவத்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.