Skip to main content

கேஸ் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்! மூதாட்டி பலி!!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

dhd

 

சேலம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் நான்கு வீடுகள் தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் இன்று (23.11.2021) அதிகாலை கேஸ் அடுப்பை பற்றவைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் அருகில் இருந்த நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், 6 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தீயணைப்பு ஊழியர் பத்மநாபன் என்பவரது வீட்டில் உள்ள சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்