Garukka Vinod remanded in court till Nov 15

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகையும் குற்றச்சாட்டுகளை வைத்தது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருந்தது. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்திடம் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் சார்பில் வாக்குமூலம் பெறப்பட்டது.

நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கருக்கா வினோத்தின் போலீஸ் காவல் நாளையுடன் (02-11-23) முடிவடையும்நிலையில் இன்று,சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து நவ.15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ரவுடி கருக்கா வினோத்தை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment