garden guard passed away near  Krishnagir sulakiri

சூளகிரி அருகே, தோட்டக் காவலாளியை மர்ம நபர்கள் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கும்பளம் கடத்தூரைச் சேர்ந்தவர் திப்பையா (42). உள்ளூரில் உள்ள ஒருவரின் தோட்டத்தில் இரவுக் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி துளசி. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில், சனிக்கிழமை (ஜூலை 23) வழக்கம்போல் இரவு காவல் பணிக்குச் சென்றார். அப்போது அவரை வழிமறித்த சிலர், அவரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் சடலமாகக் கிடப்பதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற சிலர், இதுகுறித்து பேரிகை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

டி.எஸ்.பி சிவலிங்கம், பேரிகை காவல்நிலைய காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலத்தை, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாமா? அல்லது பெண் விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.