s

சேலத்தில், மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் பிரபல ரவுடியும், அவரது நண்பரும் பலியானார்கள்.

சேலம் மணக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா. பிரபல ரவுடி. இவர் மீது திமுக பிரமுகர் சோலைராஜ் கொலை வழக்கு மற்றும் சில வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. திங்கள் கிழமை காலை (நவம்பர் 12, 2018) சத்யா தனது நண்பர் சதீஸ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

Advertisment

அங்குள்ள உழவர் சந்தை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த சேலம் மாநகராட்சி குப்பை லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சத்யாவும், சதீஸ்குமாரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஏற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில், வரும் வழியிலேயே சத்யா இறந்துவிட்டது தெரிய வந்தது. சதீஸ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment