mm

மதுரையில் குப்பைகளை அகற்ற சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை பந்தல்குடி பகுதி கால்வாயை பாண்டியராஜன் என்பவர் சுத்தம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கால்வாயில் இறங்கியதும் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதையறிந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த மீட்புப் படையினர் இரண்டு மணி தேடுதலுக்குப் பின்பு பாண்டியராஜனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் மதுரை பந்தல் குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.