Skip to main content

        மகாத்மாகாந்தி வருகையின் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை 

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 

    மகாத்மாகாந்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்ததன் நினைவை போற்றும் வகையில் அஞ்சல்துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யு இ.அ.ப., முன்னிலை வகித்தார்.  அஞ்சல் உறையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது... 

 

g


    நாடு முழுவதும் தேச தந்தை காந்தியடிகளின் 150 -வது பிறந்த நாள் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்திய அஞ்சல் துறையின் சார்பிலும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காந்தியடிகள் 21.09.1927 அன்று புதுக்கோட்டைக்கு  வருகை தந்துள்ளதை  நினைவு கூறும் வகையில் இன்று வெள்ளிக் கிழமை தபால் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.  இதன்மூலம்  புதுக்கோட்டைக்கு காந்தியடிகளின் வருகை அகில இந்திய அளவில் பேசப்படும்.


    மேலும் காந்தியடிகள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தபோது வரவேற்புக்குழு மூலம் வரவேற்புரை வாசிக்கப்பட்டது. அதன் நகல் இன்றும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி  இராமசந்திரபுரம் உயர்நிலைப் பள்ளிக்கு காந்தியடிகள் வருகை தந்து மாணவ, மாணவியர்களை கதர்  ஆடை அணிய அறிவுறுத்தியும்,  அவர்கள் தினமும்  அரைமணி நேரம் ராட்டையில் நூல் நூற்க அறிவுறுத்தியும் குறிப்பு எழுதியுள்ளார். 


    இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேச தந்தை காந்தியடிகள் வருகையினை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் என்றும் நினைவு கொள்வதுடன் காந்தியடிகளின் கொள்கையை அனைவரும் பின்பற்ற உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.


    நிகழ்ச்சியில்  புதுக்கோட்டை சுதந்திர போராட்ட தியாகி நாகப்பன், புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர்  சுவாதி மதுரிமா, உதவி கண்காணிப்பாளர் குருஷங்கர், புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மும்பையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்; 12 மணி நேரம் செயல்படும் மத்திய அரசு நிறுவனம்!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

following mumbai in tamilnadu central government agency that operates for 12 hours
கோப்பு படம்

 

தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் ஒரு தகவலை ஒரே நிமிடத்தில் உலகின் எதிர் திசையில் இருப்பவரிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. ஆனால், உலகமயமாக்கல் நிகழ்வதற்கு முன்பு வரை ஒரு தகவலை அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பதே பெரும் காரியமாக இருந்து வந்தது. அந்தக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரும் உதவியாக இருந்தது தபால் துறை. அரசுத் துறையான தபால் துறை தொலைத்தொடர்பு வசதிகள் பெருகத் தகவல் பரிமாற்றத்தில் தேக்கம் கண்டது. ஆனால், மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எளிதாக்க பல்வேறு முயற்சிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இணைய வங்கி சேவை, காப்பீடு வழங்குதல் போன்றவற்றை முன்னெடுத்து வருகிறது.

 

சமீபத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலைத் திட்டம் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 தபால் நிலையங்களில் 12 மணி நேரச் சேவைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்  முறையாக பகல் 12 மணி நேரமும் செயல்படும் வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் தபால் நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த தபால் நிலையமானது காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

மேலும் வங்கி பரிவர்த்தனை சேவைகளான சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு,  மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் காப்பீட்டு பரிவர்த்தனைகள், தபால் சேவையில் பதிவு தபால், விரைவு தபால், பார்சல் சேவைகள், அயல்நாட்டு தபால் சேவை, விபிஎல், விபிபி தபால் சேவைகள், மணியார்டர் போன்ற சேவைகளும் 12 மணி நேரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பெருகும் ஆதரவு; களத்திற்கு வந்த அமைப்புகள்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

indian wrestlers related issue some organisation support trichy

 

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பதவி நீக்கம் செய்வதுடன், அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதன் தொடர்ச்சியாக, திருச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இணைந்து இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரும்பு தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

 

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் பாஜக எம்.பியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விவசாயிகளைப் பாதுகாக்க விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டுமெனவும் பெண்களைப் பாதுகாக்க குற்றவாளிகளுக்கு துணைபோகாமல் தண்டிக்க வேண்டுமெனவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர்.