Advertisment

தூத்துக்குடியில் 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

 Ganja worth 1.30 crore seized in Tuticorin!

தூத்துக்குடியில் 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் வாலசமுத்திரத்தில் வேனில் கடத்தப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 450 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வேனை ஓட்டிவந்த ஓட்டுநர் ஆண்டிசெல்வம் என்பவரை கைது செய்த க்யூ பிரிவு போலீசார்கைப்பற்றப்பட்ட கஞ்சாவானது இலங்கைக்கு கடத்தப்படுவதாக இருந்ததா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் ஒரே நாளில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கள்ளியூர் பகுதியில் விபத்துக்குள்ளான கார் ஒன்றில் 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சிக்கியதால் செம்மரத்தை கடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டதாக அந்தப்பகுதி மக்கள் தகவலளித்த நிலையில், காருக்குள் இருந்த 500 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Cannabis police Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe